என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்: காலா திரைப்பட நடிகை அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
478Shares
478Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகையான ஹூமா குரேஷி படுக்கைக்கு அழைப்பது குறித்த பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார்.

பிரான்சில் 71-வது கேன்ஸ் திரைப்படவிழாவின் போது பிரபல திரைப்பட நடிகையான ஹூமா குரேஷி, கருத்து சுதந்திரம் இந்தியாவில் பெண்கள், அவரது சொந்த அனுபவங்கள் போன்றவைகள் குறித்து கூறினார்.

அப்போது, இந்தியாவிலும் உலகின் மற்ற இடங்களிலும் பெண்கள் துன்புறுத்துதலுக்கு எதிராக பேசும் அமைப்பு உருவாகி விட்டது.

பெண் அவளுடைய அறநெறி பற்றி, அவள் அணிந்திருக்கு ஆடைகள் பற்றியும் அத்தகைய அனைத்து விஷயங்கள் குறித்து நான் நியாயமற்றது என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யபடும் சம்பவங்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கான தேவையை காட்டுகின்றன.

இதற்கு சட்டங்கள் மட்டும் இருந்தால் போதாது, மாற்றம் மிகவும் ஆழ்ந்ததாக இருக்க வேண்டும், தன்னார்வமாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறையிலும் உள்ளது, இதை நானும் சந்தித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்