பாரீஸில் வெறிச்செயலில் ஈடுபடுவதற்கு முன் தீவிரவாதி உரக்க கத்திய வார்த்தை!

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்
1056Shares
1056Shares
ibctamil.com

பாரீஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஓபரா மாவட்டத்தில் பொதுமக்கள் இடையே புகுந்த நபர் ஒருவர் கொடூரவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வாளால் வெட்டுவதற்கு முன்னர் ல்லாஹு அக்பர் என உரக்க கத்தியுள்ளான். அதன்பின்னரே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளான்.

சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் 20 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அவன் ஒரு ஐஎஸ் தீவிரவாதி ஆவான் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த நபரின் வயது 29. இந்த சம்பவம் நடைபெற்ற இடம் சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் இடம் ஆகும். இங்கு அதிக கடைகள், உணவகங்கள் இருக்கின்றன. இதனால் தற்போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். மீண்டும் பிரான்சில் இரத்தத்திற்கு விலை கொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 250 பேர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்