பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் தெரியுமா? வெளியான தகவல்கள்

Report Print Santhan in பிரான்ஸ்
2014Shares
2014Shares
ibctamil.com

பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடத்திய நபர் செச்சன்யாவைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒபாரா மாவட்டத்தில் மர்ம நபர் ஒருவன் அங்கிருந்த பொதுமக்களை எல்லாம் கண் மூடித்தனமாக குத்தினான்.

இதில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும், ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் இரண்டு பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தாக்குதல் நடத்திய நபர் ரஷ்யாவின் Chechnya-வைச் சேர்ந்தவர் எனவும் 1997-ஆம் ஆண்டு பிறந்துள்ள இவருக்கு வயது 20 எனவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த நபரின் பெயரை பொலிசார் தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும், இருப்பினும் அவனின் தாய் மற்றும் தந்தை இருவரையும் பொலிசார் தனியாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நபர் பிரான்ஸ் குடியுரிமையை பெற்றிருந்ததாகவும் தாக்குதல் நடத்தும் முன்பு அல்லாஹ் அக்பர் என்று கத்திக் கொண்டே தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்த போதிலும், முழுமையான விசாரணைக்கு பின்னரே இது உறுதி செய்யப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்