பாரிஸ் நகரில் கொலைவெறி தாக்குதல் நடத்தியவரின் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
686Shares
686Shares
ibctamil.com

பாரிஸ் நகரை உலுக்கிய கொலைவெறி தாக்குதல்தாரியின் புகைப்படத்தை முதன்முறையாக விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நிரந்தர தொடர்பில் இருந்து வந்தவரும் பிரான்சில் அகதியாக குடியேறிய 20 வயது செச்சினியா நாட்டவர் தான் குறித்த தாக்குதல்தாரி.

Khamzat Asimov என்ற அந்த இளைஞன் நடத்திய கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க Opera Garnier பகுதியில் இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது.

சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே குறித்த இளைஞரின் பெற்றோரை பாரிஸ் நகரில் உள்ள அவர்களது குடியிருப்பில் இருந்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

யுத்த பூமியான செச்சினியாவில் இருந்து கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளியேறிய பின்னர், அவர்கள் பிரான்ஸ் குடியுரிமை பெற்று தலைநகர் பாரிசிலேயே குடியிருந்து வருகின்றனர்.

அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அசிமோவ் பொலிசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தவர் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி குறித்த கொலைவெறி தாக்குதலை அடுத்து அசிமோவின் நண்பர் ஒருவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பிரான்சில் மட்டும் சுமார் 30,000 செச்சினியா நாட்டவர்கள் குடியிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்