ரயில் பயணிகளுக்கு இனி திண்டாட்டம் தான்: பிரான்ஸ் ரயில்வே துறையினர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
262Shares
262Shares
ibctamil.com

அரசின் மறுசீரமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் திங்கட்கிழமையும் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என பிரான்ஸ் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

நாட்டின் அதிவேக ரயில்களிலும் உள்ளூர் ரயில்களிலும் சராசரியாக மூன்றில் ஒன்று மட்டுமே ஓடும் என்பதால் திங்கட்கிழமை பயணிகளுக்கு பிரச்சனைக்குரிய நாளாகவே இருக்கும் என தேசிய ரயில்வே நிறுவனமான SNCF தெரிவித்துள்ளது.

இண்டர் சிட்டி ரயில்கள் எனப்படும் நகரங்களுக்கிடையே செயல்படும் ரயில்களில் ஐந்தில் ஒன்று மட்டுமே செயல்பட இருப்பதால் அந்த சேவை இன்னும் மோசமாக பாதிக்கப்படும்.

உள்ளூர் ரயில்களில் மூன்றில் ஒன்று மட்டுமே செயல்பட உள்ளதால் அதுவும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ரயில் சேவைகளுக்கு தடைகள் ஏற்படுத்தப்படும் என்று தங்களுக்கு தகவல் வந்துள்ளதாக SNCF தெரிவித்துள்ளது, அதாவது ரயில்வே ஊழியர்கள் ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள் மற்றும் ரயில்வே அலுவலகங்கள் ஆகியவற்றில் மறியலில் ஈடுபடலாம் என்று SNCF எதிர்பார்க்கிறது.

ஏப்ரலில் தங்கள் சுழற்சி முறை வேலை நிறுத்தத்தை தொடங்கிய ரயில்வே ஊழியர்கள், ஜூன் இறுதி வரையில் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் இரண்டு நாட்கள் என மொத்தம் 36 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

தற்போதைய சுழற்சி வேலை நிறுத்தம் சனிக்கிழமை இரவு தொடங்கியது, அது செவ்வாய்க்கிழமை காலை வரை தொடரும்.

பிரான்ஸ் பொருளாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் திட்டங்களுக்கு ரயில்வே வேலை நிறுத்தம் பெரும் சவாலாக உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்