பிரான்ஸ் அரசுக்கு எதிராக வாக்களித்த ரயில்வே ஊழியர்கள்: மேக்ரானுக்கு பின்னடைவா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் நடத்திய உள் வாக்கெடுப்பு ஒன்றில் அரசு ரயில் நிறுவனத்தின் ஊழியர்கள் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் சீர்திருத்தங்களை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

வாக்களித்தவர்களில் 95 சதவிகிதத்தினர் சீர்திருத்தங்களை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

150,000 ரயில்வே ஊழியர்களில் 90,000பேர் மேக்ரானின் சீர்திருத்தங்களை எதிர்த்து வாக்களித்துள்ளனர். ஆனால் அரசாங்கமோ இந்த வாக்கெடுப்பே சட்டப்பூர்வமாக எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒன்று என்று கூறி அதை அலட்சியப்படுத்தியுள்ளது.

சீர்திருத்தங்களை எதிர்த்து அரசு ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தங்கள் போக்குவரத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போகவில்லை.

ஜனாதிபதி மேக்ரானும் ரயில்வே துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக எடுத்த முயற்சியில் இருந்து சற்றும் பின் வாங்குவதுபோல் இல்லை.

ரயில்வே துறையின் பொறுப்பு வகிக்கும் Guillaume Pepy, ஜனாதிபதியின் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் அதேநேரத்தில் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில்வே துறைக்கு 350 முதல் 400 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேக்ரானின் சீர்திருத்தங்கள் தொடர்பான வரைவு, நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஜூன் மாதத் துவக்கத்தில் மேல் சபையின் வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ளது.

இதற்கிடையில் கருத்துக் கணிப்புகள் பொது மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் மேக்ரானின் சீர்திருத்தங்களை ஆதரிப்பதைக் காட்டுகின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...