பிரான்ஸ் அணியில் சிறப்பாக ஒன்றும் இல்லை: டென்மார்க் பயிற்சியாளர்

Report Print Kabilan in பிரான்ஸ்

உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான பிரான்ஸ் அணியில் சிறப்பாக ஒன்றும் இல்லை என டென்மார்க் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஜூன் 14ஆம் திகதி தொடங்க உள்ள இந்த தொடரில் 32 நாடுகள் விளையாட உள்ளன.

இவை நான்கு அணிகள் கொண்ட Groups ஆக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘C' பிரிவில் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, பெரு, டென்மார்க் அணிகள் இடம் பிடித்துள்ளன.

இந்த நான்கு அணிகளில் பிரான்ஸ் மிகவும் வலுவான அணியாகும். இதே பிரிவில் இருக்கும் டென்மார்க் அணிக்கு, பிரான்ஸ் அணி மிகவும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் அணி குறித்து டென்மார்க் அணியின் பயிற்சியாளர் Age Hareide கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தற்போதைய பிரான்ஸ் அணியை நாம் நம்பவில்லை. அவர்களிடம் சிறப்பான ஏதும் இல்லை. பிரான்ஸ் அணியை வழி நடத்த ஷிடேன் ஷிடேன் போன்ற சிறந்த தலைவர்கள் இல்லை. அவர்கள் அணியாக விளையாட வேண்டியது அவசியம்.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் பால் போக்பா, மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக நீலம் மற்றும் வெள்ளை நிற முடியுடன் விளையாடினார். எங்களுக்கு எதிராக சிவப்பு மற்றும் வெள்ளை முடியுடன் விளையாடலாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்