பிரான்சில் காணாமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் காணமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உள்விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்சில் கடந்த சில வருடங்களாக காணமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதில் 2016 ஆம் ஆண்டு 687 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டில் 1,328 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக மொத்தம் 49,422 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 1,328 சிறுவர்களின் நிலை என்ன என்றே தெரியவில்லை எனவும், அதை கண்டு பிடிப்பதில் சிக்கலாக இருப்பதாகவும் உள்விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers