பிரான்சில் திடீரென்று தீப்பற்றி எரிந்த கார்: தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள்

Report Print Santhan in பிரான்ஸ்
129Shares
129Shares
ibctamil.com

பிரான்சில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், அங்கு நீண்ட நேரம் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

பிரான்சின் Champerret பகுதியிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 15.20 மணிக்கு சாலையில் சென்று கொண்டிருந்த போது, கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனால் சாலையின் இரண்டு பகுதிகளிலும் போக்குவரத்து தடை ஏற்பட்டது. நீண்ட நேரமாக போராடி தீயணைப்பு படையினர் தீயணை அணைத்தனர்.

இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இருப்பினும் நீண்ட நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. 30 தீயணைப்பு படை வீரர்கள் சேர்ந்து 16.30 மணி அளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்