பிரான்ஸில் கன மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நகரம்..48 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

Report Print Kavitha in பிரான்ஸ்
110Shares
110Shares
lankasrimarket.com

பாரிசில் கடந்த நாட்களாக நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் நேற்று 48 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 48 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கடும் மழைப்பொழிவு இடம்பெற்றிருந்தது.

செம்மஞ்சள் எச்சரிக்கையானது இன்று திங்கட்கிழமை காலை 6 மணிவரை அறிவிக்கப்பட்டிருந்தது இன்றும் கன மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று, மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கடும் மழைப்பொழிவு காரணமாக Brittany மற்றும் Morlaix நகரம் முற்று முழுதாக தண்ணீரில் மூழ்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடைகள் மற்றும் கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கையும் வீதிகளில் தேங்கி நின்ற தண்ணீரால் வானகங்களும் மேற்கொண்டு பயணிக்க முடியாமல் முடங்கி மக்கள் மிகவும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் முழுவதும் குறித்த பிராந்தியங்களில் மழை பொழிவு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்