அவரா இவர் ? இமானுவல் மேக்ரானின் மனைவியின் கலர்புல் மாற்றம்...

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
186Shares
186Shares
ibctamil.com

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் G7 மாநாட்டிற்காக கனடாவுக்கு சென்றுள்ள அவரது மனைவியான பிரிஜிட் மேக்ரான் வழக்கம் போல் பத்திரிகைகளில் கவனம் ஈர்த்தார்.

முதல் நாள் வெள்ளைக் கோடுகள் கொண்ட நீல நிற ஸ்வெட்டரில் எளிமையாக தோற்றமளித்த பிரிஜிட் மேக்ரான், அன்று மாலையிலேயே நேரெதிராக பர்ப்பிள் கலந்த நீல நிற கோட்டுடனான முழங்கால் வரையுள்ள உடையில், காலையில் பார்த்த அவரா இவர் என புருவம் உயர்த்த வைத்தார்.

வியாழக்கிழமை மீண்டும் இன்னொரு நீல நிறத்தில் ஜொலித்த பிரிஜிட் மேக்ரான், இவருக்கு நீல நிறம் பிடிக்குமோ என்று எண்ண வைத்தார். அன்று நீல நிற கோட் சூட்டும் பொருத்தமாக வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார்.

அவரது தோற்றம் கண்டு காற்றே அதிர்ந்து போனதோ என்னமோ, சற்று பலமாகவே காற்று வீச துணைக்கு வந்த அவரது துணைவர் இமானுவல் மேக்ரான் தனது காதல் மனைவியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார்.

புதனன்று மேக்ரான் ஜோடி ஒட்டாவா சென்றபோது கருப்பு பேண்டும், வெள்ளை நிற சட்டையும், சிவப்பு நிற கோட்டும் அணிந்திருந்த முன்னாள் ஆசிரியையான பிரிஜிட் பள்ளி ஒன்றிற்கு கனடா பிரதமரின் மனைவி சோபியுடன் சென்றார். இருவரும் மிக உற்சாகமாக மாணவர்களுடன் அளவளாவினர்.

ஒரு புறம் தத்தம் கணவர்கள் உலக செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக, அவர்களது மனைவிகளும் முக்கியமாக பிரிஜிட் மேக்ரானும்,சோபியும் கவனம் ஈர்த்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்