பிரான்ஸில் மின் தூக்கியில் ஏற்பட்ட விபத்து: பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

Report Print Raju Raju in பிரான்ஸ்
219Shares
219Shares
ibctamil.com

பிரான்ஸில் வணிக வளாகத்தில் உள்ள மின் தூக்கியில் விபத்து ஏற்பட்ட நிலையில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

Argenteuil நகரில் உள்ள வணிக வளாகத்தில் விபத்தானது நடந்துள்ளது.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், குறித்த சிறுவன் தரை தளத்தில் இருந்து முதலாவது தளத்துக்கு மின் தூக்கியில் சென்று கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

விபத்தை தொடர்ந்து வணிக வளாகத்தில் இருந்த ஆயிரம் பேர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அவசரகால முகாம் அந்த பகுதியிலேயே அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்