பிரான்ஸ் வழக்கறிஞர்களால் பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவிக்கு சிக்கல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
305Shares
305Shares
ibctamil.com

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனின் ஆபாச புகைப்படங்கள் வெளியான விவகாரத்தில் பெருந்தொகை இழப்பீடு வழங்கியிருப்பது தேவையற்றது என பிரான்ஸ் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விவகாரத்தில் இழப்பீடாக இளவரசி கேட் மிடில்டனுக்கு சுமார் 92,000 பவுண்ட்ஸ் வழங்கப்பட்டது.

ஆனால் இளவரசர் ஹரியின் மனைவி மேகம் மெர்க்கல் ஆபாசமான புகைப்படங்களுக்கு தாராளமாக போஸ் தந்துள்ளதையும் பிரான்ஸ் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இளவரசி கேட் மிடில்டன் பிரான்சில் தங்கியிருக்கும்போது மொட்டைமாடியில் வெயில் காய்ந்துள்ளார்.

அப்போது தொலைதூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில ஆபாச புகைப்படங்கள் பிரான்சில் உள்ள Closer பத்திரிகையில் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த பிரித்தானிய அரண்மனை வழக்கறிஞர்கள், இழப்பீடாக பெருந்தொகையை பெற்றுத் தந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் மேல்முறையீடுக்கு தயாராகும் Closer பத்திரிகையின் வழக்கறிஞர்கள், தற்போதைய அரச குடும்பத்தினர்கள் ஆபாச புகைப்படங்களுக்கு எதிர்ப்பேதும் தெரிவிக்காத நிலையில் இளவரசி கேட்டின் இந்த முடிவு வெறும் பாசாங்காகவே கருதப்படுகிறது என இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கலின் புகைப்படங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டுமின்றி பிரான்சில் இதுபோன்ற ஆபாச படங்களுக்கு அபராதமாக வெறும் 100 பவுண்ட்ஸ் செலுத்தினாலே போதுமானது எனவும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.

மேலும் மேகன் மெர்க்கலின் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தரவுகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேகன் மெர்க்கலின் மேலாடை இல்லாத புகைப்படமானது கடந்த 2013 ஆம் ஆண்டு ஆண்களுக்கான ஆரோக்கிய பத்திரிகை ஒன்றிற்காக பதிவு செய்யப்பட்டதாகும்.

மேலும், மேகன் மெர்க்கல் கடற்கரையில் மார்பகத்தை கமெராவுக்கு காட்டும் புகைப்படம் ஒன்றையும் நீதிமன்றத்தில் பிரான்ஸ் வழக்கறிஞர்கள் ஆதாரமாக எடுத்துக்காட்ட உள்ளனர்.

குறித்த பத்திரிகை இளவரசி கேட் மிடில்டனுக்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டதுடன் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது என பிரித்தானிய அரண்மனை அறிவித்த நிலையில் மேகன் மெர்க்கலின் பழைய புகைப்படங்களால் மீண்டும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்