பிரான்சில் சவப் பெட்டியை தோண்டி தங்கப் பல் திருடிய கும்பல்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Report Print Santhan in பிரான்ஸ்
202Shares
202Shares
ibctamil.com

பிரான்சில் சவப் பெட்டியை தோண்டி எடுத்து, அங்கிருந்து தங்கப்பல் எடுத்த திருடங்களுக்கு நீதிமன்றம் சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பிரான்சின் Pantin-ன் cimetière de pantin பகுதியில் உள்ள கல்லறையில் சவப்பெட்டியை தோண்டி அதிலிருந்த தங்கத்திலான பல், நகைகள் என மொத்தம் 10,000 யூரோ மதிப்பு கொண்ட பொருட்களை திருடினர்.

இதை அறிந்த பொலிசார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த சம்பவம் கடந்த 2012-ஆம் ஆண்டு நடத்திருந்தாலும், இது தொடர்பான வழக்கு அங்கிருக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அந்த மூவருக்கும் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012, 2013, 2014 ஆண்டுகளில் திருடர்கள் கல்லறையில் இருக்கும் சவப்பெட்டியை தோண்டி திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்