முதன்முறையாக லண்டனை மிஞ்சிய பாரீஸ்: ஆய்வு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
215Shares
215Shares
ibctamil.com

வர்த்தக நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்வதற்கு மிகச் சிறந்த ஐரோப்பிய நகரங்களில் முதன்முறையாக லண்டனை பாரீஸ் முந்தியுள்ளதாக EY என்னும் கன்ஸல்டன்சி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

502 சர்வதேச வர்த்தக தலைவர்களிடம் EY மேற்கொண்ட ஆய்வில் அவர்கள் தொழில் முதலீடு செய்வதற்கு லண்டனை விட பாரீஸ் சிறப்பானதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலீட்டாளர்கள் பாரீஸில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

பிரான்ஸில் 2017இல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் வர்த்தகங்களை ஆரம்பிக்க அல்லது விரிவாக்கம் செய்ய முன்வைக்கப்பட்டதாக EYஇன் அறிக்கை கூறுகிறது.

முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முதலிடம் பிடித்துள்ள அதே நேரத்தில் பிரான்ஸ் முன் வைத்துள்ள திட்டங்கள் மூலம் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையைப் பொருத்தவரை பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது.

பிரித்தானியா முதலிடத்தையும், ஜேர்மனியும் ரஷ்யாவும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அந்நிய முதலீட்டைப் பொருத்தவரை பிரான்சுக்கு அதிக வருவாயைக் கொடுப்பதில் அமெரிக்கா முதலிடம் பிடிக்கிறது.

அதைத் தொடர்ந்து ஜேர்மனியும் பிரித்தானியாவும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கின்றன.

என்றாலும் எல்லாவற்றிற்கும் மேலாக பிரான்ஸ் மீது சர்வதேச முதலீட்டாளர்களின் திருப்தி 2017இல் உச்சத்தில் இருந்ததாக EYஇன் ஆய்வு குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்