பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை செல்லமாக மனு என்று அழைத்த ஒரு இளைஞரிடம் கோபப்பட்ட அவர் அந்த இளைஞருக்கு சீரியஸாக அறிவுரை வழங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மக்கள் கூட்டத்திடம் கைகுலுக்கிக் கொண்டிருந்த போது அந்த பதின்ம வயது இளைஞர் ஜனாதிபதியை மனு என்று செல்லப்பெயரிட்டு அழைத்து எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்.
அத்துடன் அவர் தேசிய கீதத்துக்கு இணையான international socialist anthem என்னும் பாடலின் வரிகளையும் பாடிக்கொண்டிருந்ததை தொலைக்காட்சி ஒளிபரப்பியதை பிரான்ஸ் ஜனாதிபதி பார்த்திருந்தார்.
அதனால் சட்டென கோபமுற்ற இமானுவல் மேக்ரான், அந்த இளைஞரிடம், நீங்கள் ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறீர்கள், அதில் இப்படி நீங்கள் நடந்து கொள்ளக் கூடாது. நீங்கள் ஒரு கோமாளியைப் போல் நடந்து கொள்ளக்கூடாது, இந்தப் பாடலை பாடக்கூடாது.
அதுபோல என்னை ஜனாதிபதி அவர்களே என்றோ அல்லது சார் என்றோ அழைக்க வேண்டும் புரிகிறதா? என்று சுருக்கென்று கேட்டார். அந்த பையன் தலை குனிந்து மன்னிப்புக் கேட்டான்.
சாரி, ஜனாதிபதி அவர்களே என்றான் அவன். ஆனாலும் விடவில்லை மேக்ரான். தொடர்ந்து அறிவுரைகள் வழங்க ஆரம்பித்தார். விமர்சகர்கள் பிரான்ஸ் ஜனாதிபதி இப்படி நறுக்கென்று பேசுவது இது முதல் முறை அல்ல என்கிறார்கள்.