ரயிலில் பிறந்த குழந்தைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்: 25 வயது வரை இலவச பயணம் செய்ய பிரான்ஸ் அனுமதி

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தைக்கு, 25 வயது வரை ரயிலில் பயணம் செய்ய அந்நாட்டு ரயில்வே நிர்வாகம் சிறப்பு சலுகை அளித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸிற்கு கர்ப்பிணி பெண் ஒருவர், நேற்று ரயிலில் பயணம் செய்துள்ளார். ரயில் ஆபேர் நிலையத்திற்கு அருகில் வந்தபோது, குறித்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 11.40 மணியளவில் அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

இந்நிலையில், ரயிலில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு 25 வயது நிறைவு பெறும் வரை, ரயிலில் இலவசமாக பயணம் செய்யும் சிறப்பு சலுகையை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...