பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய சுஷ்மாசுவராஜ்

Report Print Santhan in பிரான்ஸ்
148Shares
148Shares
lankasrimarket.com

இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாட்கள் அரசு முறைப்பயணமாக கடந்த 17-ஆம் திகதி புறப்பட்டார்.

இதில் பிரான்ஸ் சென்ற இவரை அந்நாட்டு இந்திய தூதர் வரவேற்றார். அங்கு நடைபெற்ற இந்திய கலாச்சார மையத்தின் பெயர் மாற்றும் விழாவில் சுஷ்மா கலந்து கொண்டார்.

இதையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்