குழந்தையை கன்னத்தில் அறைந்த மதகுரு இடைநீக்கம்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

பிரான்சில் பெயரீட்டு விழாவின்போது அழுத குழந்தையை கன்னத்தில் அறைந்த மதகுரு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஞாயிறு அன்று Champeaux பகுதி தேவாலயத்தில் வைத்து 2 வயது குழந்தைக்கு 89 வயதான பாதிரியார் Jacques Lacroix பெயரீட்டு விழா நடத்தினார்.

அப்போது குறித்த சிறுவன் சத்தமிட்டு அழுதுள்ளான். இதனையடுத்து பாதிரியார் Jacques Lacroix அவனை அமைதிப்படுத்த பல முறை முயன்றுள்ளார்.

ஆனால் பாதிரியாரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ஆனாலும் சிறுவன் அழுகுரலை நிறுத்தவில்லை.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாதிரியார் Jacques Lacroix பொளேரென கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனால் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர், இச்சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாக பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் குறி்த்த பாதிரியார், பெயரீட்டு மற்றும் திருமண நிகழ்வுகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையின் குடும்பத்தினரிடம் பாதிரியார் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், தேவாலய விடயங்களில் கூட தலையீடு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்