வீணாகும் 59,000 டன் உணவு: பிரான்ஸ் எடுத்த நல்ல முடிவு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
304Shares
304Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆண்டொன்றிற்கு 59,000 டன் உணவு வீணாக குப்பைத் தொட்டிக்கு போகிறது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீணாகும் அந்த உணவை பயனுள்ளதாக ஆக்க பாரீஸ் நகரவாசிகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

இதன் விளைவாக 2000த்தில் 587 கிலோவாக இருந்த ஒரு நபர் வீணாக்கும் ஓராண்டு உணவின் அளவு 2016இல் 488 கிலோவாக குறைக்கப்பட்டது.

பல தன்னார்வக் குழுக்கள் இணைந்து வீணாகும் அந்த உணவை வீடற்றோர், ஓய்வு பெற்றோர் என பல தரப்பினருக்கு வழங்கி வருகின்றன.

இதற்கு உதவும் வகையில் மொபைல் appகள் கூட உருவாக்கப்பட்டுள்ளன. சில உணவகங்கள் காலாவதியாகும் நிலையிலுள்ள உணவை விலை குறைத்து விற்பதன் மூலம் உணவு வீணாகாமல் தடுப்பதோடு சிறிய வருமானமும் பார்க்கின்றன.

இதுபோக சில இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிரிஜ்களில், வீடுகளில் மீதியான, ஆனால் நல்ல நிலையிலுள்ள சமைத்த மற்றும் சமைக்கப்படாத உணவு வைக்கப்படுகிறது.

தேவையிலிருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த உணவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வருவாய் குறைவாக உள்ள பெரிய குடும்பங்கள் கூட மாத இறுதி நாட்களில் இந்த உணவைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றன.

இந்த பிரிஜ் நாளொன்றிற்கு 50 பேர் வரை உணவளிக்கிறது. இதுபோன்ற இன்னும் பல பிரிஜ்களும் பிரான்சின் பல இடங்களில் வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்