அகதிகளுக்காக ஒன்றிணைந்த 28 நாடுகள்: வெற்றியளித்த பிரான்ஸ் ஜனாதிபதியின் திட்டம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
204Shares
204Shares
lankasrimarket.com

ஐரோப்பாவுக்குள் தஞ்சம் புகும் அகதிகள் குறித்த புதிய நிலைப்பாட்டினை 28 ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளது.

இந்த திட்டமானது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானால் முன்மொழியப்பட்டதாகும்.

இது குறித்த தீர்மானம் பெல்ஜியத்தில் நடைபெற்ற 28 நாடுகள் கலந்து கொண்ட மிகப்பெரிய சந்திப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கப்பலில் ஐரோப்பியாவுக்குள் வந்த அகதிகள் தொடர்பான இத்தாலியின் முடிவை தொடர்ந்து மேக்ரான் இந்த ஆலோசனையை முன்வைத்தார்.

ஒப்பந்தம் குறித்த மேலதிக தகவல்கள் உடனடியாக வெளியிடப்படாத நிலையில் ஐரோப்பாவுக்குள் தஞ்சம் கேட்டு நுழையும் அகதிகளை ஒவ்வொரு நாடுகளும் பிரித்து உள்வாங்கி கொள்ள வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் பிரதான கோட்பாடு என அறியப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்