பிரான்சில் சிறையை உடைத்து தப்பிய கொள்ளை கும்பல் தலைவன்: சகோதரர் அளித்த வாக்குமூலம்

Report Print Santhan in பிரான்ஸ்
526Shares
526Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Reau சிறைச்சாலையில் பல வழக்குகளில் தொடர்புடைய கொள்ளை கும்பல் தலைவன் Redoine Faid(46) சிறையை உடைத்து கடந்த ஞாயிறு அன்று ஹெலிகாப்டரில் தப்பி ஓடினான்.

பொலிஸ் அதிகாரிகள் பலர் இருக்கும் வேளையில் ஹெலிகாப்டரில் வந்த இரண்டு நபர்கள் அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி Redoine Faid-ஐ ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்றனர்.

தப்பி ஓடிய அவனை பிடிக்கும் விவகாரத்தில் பிரான்ஸ் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், அவனின் சகோதரரிடம் பொலிசார் விசாராணை மேற்கொண்டுள்ளனர்.

ஏனெனில் சிறையில் இருந்து தப்பித்த Redoine Faïd, அதற்கு சற்று முன்னதாக அவனுடைய சகோதரன் Brahim Faïd இனை சந்தித்திருந்தான்.

இதன் காரணமாகவே பொலிசாரின் அவனின் சகோதரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது 46 வயதுடைய அவர் 24 மணிநேரங்களுக்கு மேலாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அதில் அவன் தப்பிச் சென்றது தொடர்பாக நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று மட்டுமே கூறியுள்ளார்.

தொடர் விசாரணைக்கு பின்னர் பொலிசார் Brahim Faïd-ஐ கடந்த திங்கட்கிழமை விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்