கொடுத்த வாக்கை காப்பாற்றிய இமானுவல் மேக்ரான்: அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
259Shares
259Shares
lankasrimarket.com

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உச்சி மாநாடு ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளும் ஒப்புக் கொண்டதற்கிணங்க அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் முதல் படியை பிரான்ஸ் எடுத்து வைத்துள்ளது.

அதன்படி Aquarius மீட்பு படகினால் மீட்கப்பட்ட அகதிகளில் 80 பேருக்கு புகலிடம் அளிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

இத்தாலி மற்றும் மால்டாவினால் கைவிடப்பட்டு மத்தியதரைக்கடல் பகுதியில் ஆதரவின்றி விடப்பட்ட அந்த தொண்டு நிறுவன படகிலிருந்த 135 ஆப்பிரிக்க அகதிகளிடம் பிரான்ஸ் அதிகாரிகள் நேர் காணல் செய்தனர்.

ஸ்பெயினில் நேர் காணல் செய்யப்பட்ட அந்த 135 பேரில் 80 பேருக்கு பிரான்ஸ் அடைக்கலம் கொடுக்கும் என புகலிட அலுவலகத்தின் தலைவரான Pascal Brice தெரிவித்தார்.

அதேபோல் Lifeline என்னும் ஜேர்மன் தொண்டு நிறுவன படகினால் மீட்கப்பட்ட 52 பேருக்கும் பிரான்ஸ் புகலிடம் அளிக்க உள்ளது.

இதே Aquarius மீட்பு படகிற்கு பிரான்சில் அனுமதி அளிக்காததற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முன்பு விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்