பிரான்சில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடி கிடந்த பெண்: நடந்தது என்ன?

Report Print Santhan in பிரான்ஸ்
251Shares
251Shares
lankasrimarket.com

பிரான்சில் கணவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய நிலையில், மனைவி வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Boulevard Murat அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடந்த 2-ஆம் திகதி மதிய வேளையில் பொலிசாருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

இதனால் குடியிருப்பு பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது, அங்கு ஒருவர் கையில் துப்பாக்கியுடன் உயிரிழந்த நிலையில், பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையிலும் கிடந்துள்ளனர்.

இதைக் கண்ட பொலிசார் உடனடியாக பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இறந்து கிடந்தவரை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இருவரும் கணவன், மனைவி எனவு குடும்ப பிரச்சனையே பின்ன வன்முறையாக மாறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் கணவர் தலையில் குண்டு பாய்ந்து இருந்துள்ளதால், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்