புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு பிரான்சில் உயிரிழந்த சீன கோடீஸ்வரர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
204Shares
204Shares
lankasrimarket.com

HNA குழுமம் என்னும் மாபெரும் பல்கூட்டுத்தாபனத்தின் சக நிறுவனரும், தலைவருமான சீன கோடீஸ்வரர் Wang Jian (57) சுற்றுலா சென்றபோது உயரமான ஒரு சுவரிலிருந்து விழுந்து இறந்த அதிர்ச்சி சம்பவம் பிரான்சில் நடைபெற்றுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக அந்த சுவரில் ஏறி தன் குடும்பத்தாருக்கு போஸ் கொடுக்கும்போது அவர் தவறி விழுந்தார்.

அப்பகுதியில் உள்ள மீட்புக் குழுவினர் அவரை மீட்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

Wang Jian, விமான நிறுவனம், சுற்றுலா மற்றும் நிதித்துறைகளில் சொத்துக்களைக் கொண்ட HNA குழுமத்தை உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக ஆக்க உதவியவராவார்.

சுற்றுலாப்பயணிகள் அதிகம் புகைப்படம் எடுக்க விரும்பும் இடமாகிய Bonnieux கிராமத்தில் புகைப்படம் எடுப்பதற்காக ஒரு சுவரின்மீது ஏறியபோது Wang Jian 50 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார்.

பிரான்ஸ் பொலிசார் இந்த சம்பவத்தை ஒரு விபத்தாகக் கருதி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்