பிரான்சில் இளைஞரை சுட்டுக் கொன்ற பொலிஸ்: வெடித்தது போராட்டம்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
306Shares
306Shares
lankasrimarket.com

பிரான்சில் இளைஞர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றதால் வன்முறை போராட்டம் வெடித்துள்ளது.

பிரான்சின் மேற்கு பகுதியில் உள்ள நான்டெஸ் நகரிலேயே நேற்று முன்தினம் இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவதினத்தன்று 22 வயது மதிக்கத்தக்க அபுபக்கர் என்பவர் காரில் வந்துள்ளார், இவரை பொலிசார் பிடிக்க முயன்ற போது தப்பியோட முயற்சித்துள்ளார்.

இதில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் காலில் அடிபடவே, துப்பாக்கியால் மற்றொருவர் சுட சம்பவ இடத்திலேயே அபுபக்கர் பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தெருக்களில் திரண்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர், சிலர் முகத்தை மூடிக்கொண்டு வன்முறையிலும் ஈடுபட்டனர்.

மருத்துவ மையம், நூலகம் உள்ளிட்ட சில கட்டிடங்களுக்கு தீ வைத்ததால், அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

இதனையடுத்து ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, இதனால் பல மணிநேரம் பதற்ற நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்