பாரிஸ் நகர பூங்காக்களில் அமுலாகவிருக்கும் புது சட்டம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
250Shares
250Shares
lankasrimarket.com

பாரிஸில் உள்ள பூங்காக்களில் புகைப்பிடிக்க தடைசெய்யப்பட உள்ளது. பல்வேறு காரணங்கள் கருதி இந்த முடிவை பாரிஸ் மாநகர நிர்வாகம் எடுத்துள்ளது.

முதல் கட்டமாக இந்த நடவடிக்கை பாரிஸில் உள்ள முக்கிய நான்கு பூங்காக்களில், அடுத்துவரும் நான்கு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விரைவில் இந்த சட்டம் நிரந்தரமாக்கப்பட உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

பாரிஸ் நகர கவுன்சிலர் Laurence Goldgrab, இது குறித்து தெரிவிக்கும் போது, பாரிஸ் மாநகரம் தொடர்ச்சியாக புகைப்பிடித்தலுக்கு எதிராக போராடி வருகிறது.

அதன் ஒரு கட்டம் தான் இது. பொது இடங்களில் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்கவும், புகைப்பிடிக்காதவர்களை மதிக்கும் எண்ணத்தோடும் பொது பூங்காக்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட உள்ளது என குறிப்பிட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில், குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்த போதும் வீதியில் இருந்து 350 தொன் சிகரட் துண்டுகள் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கான செலவீனங்களை சிகரெட் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால் அதை சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்துள்ளன. மட்டுமின்றி கடந்த ஜூலை 1 முதல் Strasbourg நகரில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் சிகரெட் புகைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரிஸ் நகரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்