பிரான்சில் கொள்ளை கும்பல் தலைவன் சிறையை உடைத்து ஹெலிகாப்டரில் தப்பியது எப்படி? இறுதி நிமிடத்தை விளக்கிய விமானி

Report Print Santhan in பிரான்ஸ்
651Shares
651Shares
lankasrimarket.com

பிரான்சில் கொள்ளை கும்பல் தலைவனை எப்படி அவர்கள் காப்பாற்றிச் சென்றனர் என்பதை ஹெலிகாப்டர் இயக்கிய விமானி கூறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Reau சிறைச்சாலையில் பல வழக்குகளில் தொடர்புடைய கொள்ளை கும்பல் தலைவன் Redoine Faid(46) சிறையை உடைத்து ஹெலிகாப்டரில் தப்பி ஓடினான்.

பொலிஸ் அதிகாரிகள் பலர் இருக்கும் வேளையில் ஹெலிகாப்டரில் வந்த நபர்கள் அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி Redoine Faid-ஐ ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்றனர்.

அதன் பின் சுமார் 37 கி.மீற்றர் தூரம் சென்றவுடன் அங்கிருக்கும் ஒரு கருப்பு நிற Renault காரை பயன்படுத்தி தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஹெலிகாப்டரை இயக்கிய விமானி Mr Buy கூறியதாவது, சம்பவ தினம் நடப்பதற்கு முன்னர் இரண்டு, மூன்று தடவை தன்னிடம் ஹெலிகாப்டர் ஓட்ட கற்றுக் கொள்வதற்கு வந்திருப்பதாக சுமார் 50 வயது மற்றும் 20 மதிக்கத்தக்க நபர்கள் பேசினர்.

இதைத் தொடர்ந்து சம்பவ தினமான ஞாயிற்று கிழமை உள்ளூர் நேரப்படி காலை 09.30 மணியளவில் அதே இரண்டு பேர் தன்னிடம் வந்து பெரிய ஹெலிகாப்டர் அதாவது ஐந்து பேர் செல்லக் கூடிய Alouette II-ஐ பற்றி கேட்டனர்.

அதை ஓட்ட வேண்டும் என்று கூறினார்கள். நான் முடியாது அதில் பெட்ரோல் இல்லை என்றவுடன் என்னை அவர்கள் மிரட்டினார்கள்.

உன்னுடைய குடும்பம் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் நடப்பது வேறு என்று கூறினர்.

அதன் பின் பெட்ரோலை நிரப்பிவிட்டு, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஹெலிகாப்டரை தரையிரக்கியவுடன், ஜெயில் உடைப்பதை பற்றி பேசினர்.

இதையடுத்து மீண்டும் ஹெலிகாப்டரை எடுக்க முற்பட்ட போது ஹெலிகாப்டர் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் அந்த இரண்டு பேரும் என்னை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதனால் நான் நிலைகுலைந்தேன், அதன் பின் அவர்கள் என்னை மீண்டும் பழையநிலைமைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து ஹெலிகாப்டரில் இருக்கும் வயர்களை சரிசெய்து ஹெலிகாப்டரை இயக்கினேன். ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும் போதே அவர்கள் பெட்ரோல் பற்றி பேசினர்.

அதுமட்டுமின்றி கையில் ஏகே 47 துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் மற்றும் இரும்பை அறுக்ககூடிய ஒரு கிரைண்ட் மெசின் வைத்திருந்தனர்.

ஜெயில் இருக்கும் பகுதி வந்த போது அங்கிருக்கும் ஒரு டிரைஆங்குலர் ஆர்டை பார்த்தவுடன் அங்கே இறக்கும் படி கூறினர்.

ஹெலிகாப்டரை கீழே கொண்டு சென்று கொண்டிருந்த போது, அவர்கள் ஹெலிகாப்டர் 3 செ.மீற்றருக்கு மேலே தான் இருக்க வேண்டும், சற்றும் கிழே இறங்கினால் அவ்வளவு தான், உன் குடும்பத்தை மனதில் நினைத்துக் கொள் என்று கூறினர்.

உடனடியாக ஜெயிலின் உள்ளே சென்ற அவர்கள் கிரைன்ட் மெசினை பயன்படுத்தி சிறையை உடைத்து யாரோ ஒரு நபரை அழைத்து வந்தனர்.

அந்த நபர் ஹெலிகாப்டரில் ஏறிய போதும் கடைசி வரை எதுவும் பேசவில்லை. முன்னர் Charles de Gaulle விமானநிலையத்தில் நிறுத்த வேண்டும் என்று கூறினர்.

அதன் பின் விமானநிலையத்தின் அருகே உள்ள Total petrol station-ல் இறக்கும் படி கூறினர். இறக்கியவுடன் பெட்ரோலை வாங்கி வந்து ஹெலிகாப்டரை ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறியுள்ளார்.

தற்போது Mr Buy அந்த சம்பத்தில் இருந்து இன்னும் மீளாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் பொலிசார் பாதி எரிந்த நிலையிலே ஹெலிகாப்டர் மற்றும் அந்த கார் போன்றவைகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்