பிரான்சில் அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள்: கடத்தல்காரர்கள் சதியா என பொலிசார் விசாரணை

Report Print Santhan in பிரான்ஸ்
182Shares
182Shares
lankasrimarket.com

பிரான்சில் இரண்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அகதிகளை பொலிசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

பிரான்ஸ் பொலிசாருக்கு கடந்த வியாழக்கிழமை தன்னுடைய நண்பர்கள் கடத்தப்பட்டுவிட்டதாக் போனில் தகவல் வந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் நடத்திய தேடுதல வேட்டையில், Villejuif பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டு அறைகளில் வியட்னாமைச் சேர்ந்த சுமார் 24 அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை பத்திரமாக மீட்ட பொலிசார் பேச முயற்சித்த போது, அவர்களால் பிரெஞ்சு மொழி சரியாக பேச முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட 24 பேரில் 12 பேர் சிறுவர்கள் எனவும், 10 பேர் பெண்கள் எனவும் மேலும் இரண்டு பேர் இளைஞர்கள் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் சட்ட விரோதமாக நாட்டிற்குள் புகுந்த காரணத்தினால் அவர்களை கைது செய்துள்ள பொலிசார் இவர்களை அடைத்து வைத்தது யார்? கடத்தல்காரர்களின் வேலையா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்