ஆஸ்காரின் மதிப்பு மிக்க அழைப்பை ஏற்க மறுத்த பிரெஞ்சு நடிகை: காரணம் என்ன?

Report Print Kabilan in பிரான்ஸ்
113Shares
113Shares
lankasrimarket.com

பிரெஞ்சு நடிகையான இம்மானுவல் சிக்னெர், தனது கணவர் ரோமன் போலன்ஸ்கியை வெளியேற்றியதால் ஆஸ்கர் விருது குழுவில் சேர்வதற்கான அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

பிரபல பிரெஞ்சு இயக்குநர் ரோமன் போலன்ஸ்கி(84). கடந்த 1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜேக் நிக்கல்சனின் வீட்டில் வைத்து, 13 வயது சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. எனினும், போலன்ஸ்கி மனநல ரீதியான மதிப்பீட்டிற்காக 48 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

நீதிமன்ற ஆவணங்களின் படி, போலன்ஸ்கி காவலில் இருந்த 48 நாட்களும் அவருக்கு சேவை செய்யும் நேரமாகவே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், அடுத்த ஆண்டே பொலன்ஸ்கி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், The Academy of Motion Picture Arts and Science கடந்த மாதம், 900 உறுப்பினர்களைக் கொண்ட பட்டியலை வெளியிட்டது. ஆனால், இந்தப் பட்டியலில் ரோமன் போலன்ஸ்கியின் பெயர் இடம் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு நடிகையும், போலன்ஸ்கியின் மனைவியுமானஇம்மானுவெல் சிக்னெருக்கு(52) ஆஸ்கார் விருது வழங்கும் குழுவானது, இன மற்றும் பெண் பிரதிநிதித்துவத்திற்கான குழுவில் சேர்வதற்கான அழைப்பு ஒன்றை விடுத்தது.

இந்த அழைப்பினை சிக்னெர் ஏற்க மறுத்து, தனது கணவரின் பெயர் பட்டியலில் இடம்பெறாததை எதிர்த்துள்ளார். மேலும், அவர் இதுதொடர்பாக கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடந்த சில வாரங்களுக்கு முன்பு என் கணவரை இந்த அகாடமி வெளியேற்றியதை புறக்கணித்து விட்டு எவ்வாறு நான் இதை ஏற்க முடியும்.

இதே அகாடமி தான் கடந்த 2003ஆம் ஆண்டு ‘'The Pianist'' படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை அவருக்கு அளித்தது.

ஒருவேளை இந்த அகாடமி நான் ஒரு நடிகை என்பதே போதுமானதாக நினைத்தும், 29 வயதிலேயே சிறந்த இயக்குநர்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டதை மறந்திருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்