பிரான்சில் புதிதாக இரண்டு அகதிகள் முகாம்: வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
141Shares
141Shares
lankasrimarket.com

பிரான்சில் புதிதாக வரவுள்ள அகதிகள் முகாம் செப்டம்பர் மாதம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இரண்டு அகதிகள் முகாம் திறக்கப்படவுள்ளதாகவும், இந்த அகதிகள் முகாமில் சுமார் 500 பேர் வரை தங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்குமிடம் குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

அதே சமயம் இரண்டாம் கட்ட அகதி முகாம் அமைக்கும் பணிகள் 2019-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பமாகும் எனவும், 1500 பேர் தங்கக்கூடிய மிகப்பெரிய அகதி முகாமாக அது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஜுன் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி Porte des Poissonniers பகுதியிலும், Porte de la Villette பகுதியிலும் சுமார் 1,990 அகதிகள் சிறிய கூடாரங்களில் தங்கியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்க்ளாக உள்ளனர். அவர்களுக்கான தங்குமிடமாக இந்த புதிய முகாம்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்