ஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்

பிபா உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நேற்று ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்று முடிந்தது.

மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் 4- 2 என்ற கோல் வித்தியாசத்தில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, பிரான்ஸ் அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியுள்ளதால், அந்நாடே வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைத்துவருகிறது.

இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் ரசிகர்களோடு ரசிகராக மாறியவர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மாக்ரோன். அந்த அளவுக்கு இவர் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தபோது அணி வெற்றி பெற்றதால் போட்ட துள்ளல் ஆட்டம் மற்றும் மழையிலும் தனது வீரர்களை உற்சாகப்படுத்தி வரவேற்றது உலக மக்கள் மட்டுமின்றி குறிப்பாக பிரான்ஸ் நாட்டு மக்களின் இதயத்தில் மிக நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், தொடர்ச்சியான வர்த்தக சார்பற்ற சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த மாக்ரோன் மீது எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன.

Odoxa group நடத்திய கருத்துக்கணிப்பில், மாக்ரோன் மீது 75 சதவீத மக்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில், தற்போது நடந்துள்ள உலகக்கோப்பை போட்டியின் மூலம் அவர் மக்கள் மனதில் வலுவாக இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமூகவலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். 1998 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற போது அப்போது ஜனாதிபதியாக இருந்த Jacques Chirac இன் மீது மதிப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்