தங்கள் ஹீரோக்களை பிரான்ஸ்-குரேஷியா மக்கள் எப்படி வரவேற்றனர் தெரியுமா? பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்

Report Print Santhan in பிரான்ஸ்

உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் சாதித்த பிரான்ஸ் அணி வீரர்களுக்கு தண்ணீர் வரவேற்பும், இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் நீங்கள் தான் எங்கள் ஹீரோ என்று குரேஷியா மக்கள் தங்கள் நாட்டு வீரர்களை வரவேற்றதும் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவில் கடந்த ஜுன் மாதம் 14-ஆம் திகதி துவங்கிய உலகக்கோப்பை கால்பந்தாட்ட திருவிழா கடந்த 15-ஆம் திகதியோடு முடிவுக்கு வந்தது.

15-ஆம் திகதி நடந்த இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-குரேஷியா அணிகள் மோதின.

இப்போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த தொடரில் பலம் வாய்ந்த அணிகளான பிரேசில், ஜேர்மனி, போர்ச்சுக்கல், அர்ஜெண்டினா, ஸ்பேயின் போன்ற அணிகள் நாக் அவுட் சுற்று மற்றும் காலிறுதிப் போட்டிகளில் நடையை கட்டின.

உலகில் இரண்டாம் சிறிய நாடாக இருக்கும் குரேசியாவில் இருந்து வந்த வீரர்கள், தங்கள் ஆட்டத்தில் விஸ்வரூபம் காட்ட அந்தணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

பலம் வாய்ந்த அணிகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டது. குறிப்பாக குரேஷியா அணியின் தலைவரான Luka Modric அணியை திறம்பட வழிநடத்திச் சென்று அணியை இறுதிப் போட்டி வரைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதிப் போட்டியிலும் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணிக்கு குரோசியா வீரர்கள், நெருக்கடி கொடுத்தனர். இருப்பினும் தோல்வியை சந்தித்தனர்.

கடந்த 1991-ஆம் ஆண்டில் Yugoslavia-விலிருந்து பிரிந்த பின்பு குரேஷியா அணி 5 முறை உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் 1998-ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தை பிடித்தது.

உலகக்கோப்பை வரலாற்றிலே முதன் முறையாக இறுதிப் போட்டி வரை முன்னேறிய அந்தணியை பலரும் பாராட்டி வருகின்றனர். அப்படி தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்த ஹீரோக்கள், நாடு திரும்புகிறார்கள் என்றால் அந்நாட்டு மக்கள் சும்மா இருப்பார்களா?

குரேஷியாவின் தலைநகர் Zagreb-ல் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் Bana Jelacica Square பகுதியில் குவிந்தனர்.

நேற்று மாலை விமானநிலையத்திலிருந்து இறங்கிய குரேஷியா வீரர்கள், ஒரு திறந்த வெளி பேருந்தில், கழுத்தில் வெள்ளி பதக்கத்தை அணிந்து கொண்டு வந்தனர்.

அப்போது ரசிகர்களை பார்த்த அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கையை, காட்ட அதற்கு அங்கிருந்த சில ரசிகர்கள் நீங்கள் எங்கள் நாட்டின் ஹீரோ என்று கத்தியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக குரேஷியா மக்கள் பெரும்பாலானோர் சிவப்பு, வெள்ளை நிறம் கொண்ட ஆடையையே அணிந்திருந்தனர். வெட்டுச்சத்தங்கள் விண்ணை பிளக்க, ரசிகர்கள் ஆரவாரம் செய்ய என குரேஷியா தலைநகரே வண்ணமயமாக காட்சி அளித்தது.

மக்கள் தான் சிவப்பு, வெள்ளை என்று சரியாக அணிந்திருக்கிறார்கள் என்று பார்த்தால், தலைநகரின் நடுவில் இருக்கும் தலைவரின் சிலைக்கும் குரேசியா நாட்டின் கொடியை போர்த்திருந்தனர். ஹெலிகாப்டரில் பறந்த குரேஷிய கொடி என அந்நாட்டு வீரர்களை அன்பில் நினைத்தனர்.

இதற்கிடையில் குரேசியா அணியின் தலைவர் Luka Modric கூறுகையில், நாங்கள் ஒரு அற்புதமான அணி, ஆனால் என்ன ஒரு சில நேரம் அந்தணிகளும் தடுமாறத் தான் செய்யும், என்ன நடந்தது என்பதை பற்றி எல்லாம் நான் இப்போது நினைக்கவில்லை.

ஒரு வரலாற்றை உருவாக்கியிருக்கோம், எங்கள் அணியை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தோல்வியடைந்து திரும்பிய குரேஷியா அணிக்கே இப்படி ஒரு வரவேற்பு என்றால், வெற்றி பெற்று கையில் உலகக்கோப்பையை கெத்தாக பிடித்து பிரான்சில் காலடி எடுத்து வைத்த அந்நாட்டு வீரர்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும்.

இறுதிப் போட்டியில் வென்றுவிட்டு பிரான்ஸ் அணியினர் தனி விமானத்தில் தலைநகர் பாரிசில் உள்ள Charles-de-Gaulle விமானநிலையத்திற்கு நேற்று சரியாக உள்ளூர் நேரப்படி 04.40 மணிக்கு வந்திரங்கினர்.

விமானநிலையத்தை விமானம் வந்தடைந்த போது, அவர்களது விமானம் தண்ணீர் பீய்ச்சி வரவேற்க்கப்பட்டது. அதன் பின் விமானத்தில் இருந்து இறங்கிய வீரர்கள் சிவப்பு கம்பளத்தில் வரவேற்கப்பட்டனர்.

இதையடுத்து விமான நிலையத்தில் இருந்த நுற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர். இதைத்தொடர்ந்து வீரர்கள் ஒரு திறந்த நிலை பேருந்தில் Champs-Elysées Avenue பகுதிக்கு சென்றனர்.

இவர்களின் வருகைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் சுமார் 02.00 மணியிலிருந்தே காத்துக் கிடந்துள்ளனர். பேருந்து கிளம்புவதற்கு முன்னர் பேருந்தின் முன்னர் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்கள் சென்றன.

ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொண்ட 23 வீர்ரகளும் திறந்த வெளி பேருந்தில் வர, அவ்வளவு தான் பிரான்ஸ் ரசிகர்களின் குரல் பாரிசியையே அலற வைத்தது.

வண்ணமயமாக வானத்தில் விமானங்கள் பறக்க, ஒரு திருவிழா அப்போது தான் ஆரம்பித்தது போன்று இருந்தது. டீ சர்ட்டில் திறந்த நிலை பேருந்தில் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்த நிலையில் Elysée Palace-ல் வீரர்களை அந்நாட்டு ஜனாதிபதி மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார்.

அப்போது பிரான்ஸ் அணி வீரரான Paul Pogba மேக்ரான மனைவியான Brigitte Macron-யிடம் உலகக்கோப்பையை கொடுத்து அழகு பார்த்தார்.

இதைக் கண்ட Brigitte Macron மகிழ்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் வீரர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின் ஜனாதிபதி மேக்ரான் அவர்கள் அனைவருக்கும் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால், அவர்கள் அனைவரும் Elysées Palace-ல் இருக்கும் கார்டன் பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த உலகக்கோப்பை போட்டியில் யாரும் எதிர்பார்க்காத குரேஷியா அணி இந்தளவிற்கு வந்து ஒரு வரலாற்றை படைத்துள்ளதால், அந்தணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது, அதே சமயம் 20 வருடங்களுக்கு பின் உலகக்கோப்பையை வென்றுள்ள பிரான்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...