பிரான்ஸ் வெற்றியின் போது நடுரோட்டில் காதலை வெளிப்படுத்திய இளைஞன்! அசிங்கப்பட்ட பரிதாப வீடியோ

Report Print Santhan in பிரான்ஸ்

உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் வெற்றியின் போது பிரான்ஸ் ரசிகர் ஒருவர் தன் காதலை இளம் பெண் ஒருவரிடம் தெரிவிக்க, அவர் இல்லை என்று கூறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ரசிகர்கள் அனைவரும் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த போது, Loïc Séverin என்ற இளைஞன் திடீரென்று நடுரோட்டில் தன்னுடன் வந்த தோழியிடம், கையை பிடித்து காதலை வெளிப்படுத்தினார்.

ஆனால் அந்த பெண்ணோ இல்லை என்று மறுப்பு கூற, உடனே இவர் அந்த பெண்ணை கட்டியணைத்து கூறிய போதும், அவர் இல்லவே இல்லை என்பது போல் தலையசைத்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த ரசிகர்கள் காதலை ஏற்றுக் கொள்ளும் படி வற்புறுத்தினர். இருப்பினும் அந்த பெண் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை, அதன் பின் ரசிகர்கள் வழக்கம் போல் பிரான்ஸ் அணியின் வெற்றியை கொண்டாடினர்.

இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் சிலர் இப்படி ஒரு அசிங்கம் தேவையா? அந்த பெண்ணின் முடிவு சரியான முடிவு தான், என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers