தங்கள் அணியின் தோல்விக்கு காரணமான பிரான்ஸ் அணி வீரரின் பெயரை தனது காளைக்கு வைத்த விவசாயி

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக நடந்த நாக்-அவுட்டில் அர்ஜென்டினா அணியை, பிரான்ஸ் அணி தோற்கடித்தது. இப்போட்டியில், பிரான்சின் மாப்பே 2 கோல்கள் அடித்து, அர்ஜென்டினாவை வெளியேற்றினார்.

இதனால், அர்ஜெண்டினாவை சேர்ந்த விவசாயி ஒருவர், தங்கள் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்த பிரான்ஸ் வீரர் மாப்பேவின் பெயரை, பிறந்து 22 மாதங்களான தனது காளைக்கு வைத்துள்ளார்.

அர்ஜென்டினாவில் பாரம்பரிய கிராம கால்நடை திருவிழாவில் பங்கேற்பதற்காக முதலில் பதிவு செய்யப்பட்ட காளையின் பெயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அர்ஜென்டினா அணியின் தோல்விக்கு காரணமான, எதிரணி வீரரின் பெயரை வைத்ததுள்ளதால் அந்த காளை தற்போது பிரபலமாகி வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்