பிரான்சில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபர் அதிரடி கைது: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
257Shares
257Shares
ibctamil.com

பிரான்சில் கடந்த சில வாரங்களாக கவனிக்கப்பட்டு வந்த நபர், மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சின் Toulouse பகுதியில் அமைந்திருக்கும் Albi பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இளைஞர் ஒருவரை பொலிசார் திடீரென்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபர் Toulouse நகருக்கு அழைத்து செல்லப்பட்டு அதன் பின் விசாரணைக்காக Levallois-Perret நகரில் உள்ள DGSI தலைமைச் செயலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவருடன் பெண் ஒருவர் இருந்ததால், பொலிசார் அவரையும் கைது செய்துள்ளனர்.

இதில் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், குறித்த நபர் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு வெடிப்பொருட்கள் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டதாகவும், அந்த நபரை கடந்த சில வாரங்களாக DGSI படையினர் கண்காணித்து வந்த போது, எப்போதும் பயங்கரவாத சிந்தனைகளுடன் இருந்ததாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்