பிரான்சில் சிறையை உடைத்து தப்பிய கொள்ளை கும்பல் தலைவன்! சிசிடிவி கமெராவில் சிக்கியுள்ளதாக தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
365Shares
365Shares
ibctamil.com

பிரான்சில் சிறையை உடைத்து ஹெலிகாப்டரில் தப்பித்த கொல்லை கும்பல் தலைவன் கண்காணிப்பு கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Reau சிறைச்சாலையில் பல வழக்குகளில் தொடர்புடைய கொள்ளை கும்பல் தலைவன் Redoine Faid(46) சிறையை உடைத்து கடந்த 1-ஆம் திகதி சிறையை உடைத்து ஹெலிகாப்டரில் தப்பினான்.

பொலிஸ் அதிகாரிகள் பலர் இருக்கும் வேளையில் ஹெலிகாப்டரில் வந்த இரண்டு நபர்கள் அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி Redoine Faid-ஐ ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்றனர்.

தப்பி ஓடிய அவனை பிடிக்கும் விவகாரத்தில் பிரான்ஸ் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை Val d'Oise பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா ஒன்றில் இவன் சிக்கியுள்ளான்.

Sarcelles பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை பொலிசார் சோதனை செய்த போது, அதில் ஆயுதங்கள் இருந்துள்ளது. இதனால் பொலிசார் உடனடியாக கண்காணிப்பு கமெராவை ஆராய்ந்து பார்த்த போது, காரின் உள்ளே தேடப்படும் முக்கிய குற்றவாளியான Redoine Faïd இறங்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Sarcelles பகுதியில் பொலிசார் வாகனங்களை சோதனையிட்டு வருவதை அறிந்த அவன், அருகில் இருந்த வணிக வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் தான் ஓட்டி வந்த Renault Laguna காரை நிறுத்திச் சென்றுள்ளான்.

அந்த காரை கைப்பற்றியுள்ள பொலிசார் அப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் Redoine Faïd தேடி வருகின்றனர்.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்