பிரான்சில் பூட்டியிருந்த வீட்டினுள் கொள்ளையடித்துவிட்டு தூங்கிய கொள்ளையர்கள்: சாதூர்யமாக செயல்பட்ட உரிமையாளர்கள்

Report Print Santhan in பிரான்ஸ்
478Shares
478Shares
ibctamil.com

பிரான்சில் பூட்டியிருந்த வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டு அந்த வீட்டினுள் உள்ளே தூங்கிக் கிடந்த சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Mans பகுதியின் மேற்கு பிராந்தியமான Pin-Vert-Galant பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆளில்லா வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீடு முழுவதும் கொள்ளையடிப்பதற்காக பொருட்களை தேடியுள்ளனர்.

அப்போது அவர்கள் கையில் சில நகைகள் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் செல்லாமல் குறித்த வீட்டு குடும்பத்தினரின் இளம் மகனுடைய அறையில் பொருட்களை கொள்ளையடித்த களைப்பில் தூங்கியுள்ளனர்.

மறுநாள் காலை வீட்டிற்கு வந்த வீட்டின் உரிமையாளர்கள், கொள்ளையர்கள் உறங்கி கிடப்பதைக் கண்டு சாதூர்யமாக பொலிசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் Val d'Oise பகுதி பொலிசாரால் நன்கு அறியப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்