நடுத்தெருவில் இளம்பெண்ணைத் தாக்கிய நபர், நாடாளுமன்றம் வரை ஒலித்த சத்தம்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
269Shares
269Shares
ibctamil.com

பாரீஸில் சலையில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை ஒரு மனிதன் தாக்கும் வீடியோ வெளியாகி நடாளுமன்றம் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Laguerre (22) என்ற இளம்பெண் உணவகம் ஒன்றின் அருகில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு நபர் ஆபாசமாக கமெண்ட் அடித்துக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்துள்ளான்.

இதற்கு முன்பும் இந்த நிகழ்வு கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நடந்துள்ள நிலையில், அன்று ஆத்திரமுற்ற Laguerre பதிலுக்கு கத்தியிருக்கிறார்.

கோபமுற்ற அந்த மனிதன் அந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த ஒரு ஆஷ் ட்ரேயைத் தூக்கி அவள் மீது வீச அது அவள் மீது படவில்லை.

மீண்டும் அவள் கோபத்தில் கத்த, அவளை நோக்கி நடக்கும் அந்த மனிதன் அவளைப் பளாரென கன்னத்தில் அறையும் காட்சி ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள CCTVகெமராவில் பதிவாகியுள்ளது.

அந்த நேரத்தில் கத்திக் கொண்டே Laguerre அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டாலும், பின்னர் மீண்டும் அந்த உணவகத்திற்கு வந்து அந்த கெமராவில் பதிவான அந்த காட்சிகளைப் பெற்று சமூக ஊடகங்களில் பதிவிட்டார். வைரலான அந்த வீடியோ நாடாளுமன்றம் வரை எட்டியுள்ளது.

நாடாளுமன்றம் அந்த வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இனிமேல் இதுபோல் தெருக்களில் யாராவது யாரையாவது துன்புறுத்தினால் உடனடியாக அவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் இந்த இலையுதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று சமத்துவ அமைச்சரான Marlène Schiappa தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின்படி இனி பொது இடங்களில் இதுபோல் நடந்து கொள்பவர்கள் 90 யூரோக்கள் முதல் 750 யூரோக்கள் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்