பிரான்சில் இளம் பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்த இளைஞன்: என்ன நடந்தது என்பதை விளக்கிய பெண்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இளம் பெண்ணை தாக்கிய விவகாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

எதற்காக அந்த பெண்ணை அவன் தாக்கினான் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் மேரி(22) என்ற அப்பெண் நேற்று பிரபல உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், அந்த நபர் என்னை தாகாத வார்த்தையால் திட்டினார். தொடர்ந்து என்னிடம் மோசமாக நடந்து கொண்டார். இதனால் நான் அவரை நிறுத்து என்று கூறினேன்.

தொடர்ந்து வந்த அவன் என்னை தாக்கத் தொடங்கினார். இதைக் கண்ட உணவகத்தில் இருந்த பலர் அந்த இளைஞரை கண்டித்தனர்.

அதன் பின் மேரி வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மேரி இதை ஒரு சம்பவமாக கடந்து செல்ல விரும்பவில்லை எனவும் பெண்களுக்கு எதிரான இவ்வாறான துன்புறுத்தலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்.

என்னால் அமைதியாக இருக்க முடியாது. நாம் மெளனமாக இருக்க கூடாது என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் மேரி லாகெயரை இளைஞர் ஒருவர் தாக்கினார்.

அதன் பின் அது தொடர்பான காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியதால், அந்த வீடியோவை வாங்கி, மேரி இணையத்தில் பதிவேற்றம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்சில் இதுபோன்ற துன்புறுத்தலுக்குஅண்மையில் அபராதம் விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, 105 டொலர் வரை துன்புறுத்திய நபருக்கு அபராதம் விதிக்கப்படும்

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்