விமான நிலையத்தில் மூர்க்கத்தனமாக மோதிக்கொண்ட பிரான்ஸ் ராப் பாடகர்கள்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
223Shares
223Shares
ibctamil.com

இரண்டு போட்டி ராப் பாடகர்களுக்கிடையே ஏற்பட்ட மூர்க்கத்தனமான மோதலால் பிரான்சின் Orly விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய சில விமானங்கள் தாமதமாக புறப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Orly விமான நிலையத்தில் பிரபல மற்றும் போட்டி ராப் பாடகர்களான Booba மற்றும் Kaaris இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இரண்டு பாடகர்களின் குழுவினரும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்ட காட்சியை பொதுமக்களில் ஒருவர் படம் பிடித்து சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் இரண்டு பாடகர்களும் மிருகத்தனமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறும் சத்தமும் பதிவாகியுள்ளது.

இந்த பிரச்சினையால் Orly விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய சில் விமானங்கள் தாமதமாக புறப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Booba மற்றும் Kaaris இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்தவர்கள் என்றாலும் இடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக இருவருக்கும் பகை ஏற்பட்டது.

Boobaவின் பாடல்கள் அடங்கிய 2.5 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தன.

அதேபோல் Kaarisஇன் நான்கு ஆல்பங்களின் அரை மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தன.

இரண்டு குழுக்களையும் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்