பிரான்சில் கரண்டியால் ஓட்டை போட்டு தப்பிக்க முயற்சித்த கைதிகள்: வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
149Shares
149Shares
ibctamil.com

பிரான்சில் சிறைக்கைதிகள் இரண்டு பேர் சிறையின் கூரையை கூர்மையான கரண்டியால் ஓட்டை போட்டு தப்பிக்க முயற்சி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் Alpes-de-Haute மாகாணத்தில் உள்ள Digne-les-Bains சிறைச்சாலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தும்புத்தடி ஒன்றின் முனையில் கூர்மையான கரண்டி ஒன்றை கட்டி சிறையின் கூரையில் ஓட்டை போட்டுள்ளனர்.

அதன் பின் அங்கிருக்கும் சுவரொட்டி ஒன்றில் மறைத்து வந்துள்ளனர்.

இப்படி தொடர்ந்து ஓட்டை போட்டு வந்த நிலையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கைதிகளின் செயற்பாடு, சிறைச்சாலை மேற்பார்வையாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் கடந்த செவ்வாய்கிழமை நடந்த இந்த சம்பவம் நேற்று தான் வெளியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்