என்னை ஆதரிக்காவிட்டால் பிரான்ஸ் கஷ்டப்பட வேண்டியிருக்கும்: எச்சரிக்கும் பிரித்தானிய பிரதமர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெக்சிட் விடயத்தில் தன்னை ஆதரிக்காவிட்டால் பிரான்ஸ் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுப்பதற்காக பிரித்தானிய பிரதமர் தெரசா மே அங்கு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்தாலிக்கு விடுமுறையைக் கழிப்பதற்காக சென்றிருந்த பிரித்தானிய பிரதமர் தெரசா மே, திட்டமிட்ட விடுமுறையை முடிப்பதற்கு முன்னமேயே பிரான்ஸ் புறப்படுகிறார்.

தனது பிரெக்சிட் திட்டம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளுக்குமே நன்மை உண்டாக்கும் என்பதைக் கூறி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சம்மதிக்க வைப்பதற்காக அவர் செல்கிறார்.

மேக்ரானை சம்மதிக்க வைத்துவிட்டால் அதற்குப்பின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற உறுப்பு நாடுகளை சம்மதிக்க வைக்க அவர் உதவுவார் என்பது தெரசா மேயின் எண்ணமாகும்.

Fort de Bregancon என்னும் தீவுக்கு சென்றுள்ள மேக்ரானை அங்கேயே சென்று தெரசா மே சந்திக்க உள்ளார்.

தனது திட்டம் நிராகரிக்கப்பட்டால் பிரெக்சிட்டுக்கு அதிக பிரச்சினை வரும் என்பதைக் கூறி மேக்ரானை அவர் எச்சரிக்கலாம் என கருதப்படுகிறது.

தெரசா மே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்திப்பதற்கு முன்பே Jeremy Hunt, Philip Hammond மற்றும் Greg Clark உட்பட பல பிரித்தானிய அமைச்சர்கள் பிரான்சுக்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்