பிரான்சில் விமானநிலையத்தில் மோதலில் ஈடுபட்ட நபர்கள்! எவ்வளவு சேதாரம் ஏற்பட்டது தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் விமானநிலையத்தில் பாடகர்கள் சண்டையிட்டுக் கொண்டதில், எவ்வளவு சேதாரம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

பிரான்சின் ஓர்லி சர்வதேச விமானநிலையத்தில் பாடகர்களான Booba மற்றும் Kaaris குழுக்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.

இதனால் விமானத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது, விமானங்கள் இரத்து செய்யப்பட்டது மற்றும் கடைகள் உடைக்கப்பட்டன.

விமானநிலையத்தில் மோசமாக நடந்து கொண்ட காரணத்தினால், இவர்கள் மீது மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டன.

பிரெஞ்சு விமானநிலைய அமைப்பினரான Aéroports de Paris ஒரு வழக்கையும், விமான போக்குவரத்து சேவைகளான Air France ஒரு வழக்கையும், மூன்றாவது வழக்கினை duty-free கடையின் உரிமையாளர் ஒருவரும் தொடுத்துள்ளனர்.

இதையடுத்து இரு பாடகர்கள் மற்றும் அவர்களின் குழுக்கள் என அனைவரையும் மொத்தமாக கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் காரணமாக எவ்வளவு சேதாரங்கள் ஏற்பட்டன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், Air France நிறுவனத்துக்கு மொத்தமாக 7 விமானங்கள் தாமதமாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான நஷ்ட ஈடு €8,500 எனவும் duty-free கடையில் உள்ள பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டதில், அவர்களின் மொத்த நஷ்ட்ட ஈடு €54,000 என்றும் மொத்தமாக €62,000 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோதலில் ஈடுபட்டவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers