சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு விடுவிக்கும் பிரான்ஸ் ஹோட்டல்கள்: சுவாரஸ்யக் காரணம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஹோட்டல்களில் காலியாக இருக்கும் 130,000 காலியிடங்களை நிரப்ப சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தோருக்கு பிரான்ஸ் ஹோட்டல் துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஒப்பீட்டளவில் வேலையற்றோர் வீதம் அதிகம் உடைய நாடான பிரான்சில் பிரெஞ்சு ஹோட்டல்கள் வேலைக்கு ஆள் கிடைக்காமல் கஷ்டப்படுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், ஒன்று மிக நீண்ட நேர களைப்பூட்டும் ஹோட்டல் வேலைகளை செய்ய பலருக்கும் விருப்பமின்மை.

இரண்டு, பள்ளிகளில் சரியாக படிக்காதவர்கள் கடைசியில் ஹோட்டல்களில்தான் சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருப்பதால், ஹோட்டல் வேலை அவமானமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இத்தகைய வேலையைச் செய்ய தயாராக இருக்கும் ஒரு கூட்டத்தாரை நோக்கி ஹோட்டல் துறை தனது பார்வையைத் திருப்பி உள்ளது, அவர்கள் சட்ட விரோத புலம் பெயர்வோர்.

கடந்த மாதம் ஹோட்டல் யூனியன்கள் இணைந்து அரசாங்கத்திடம் முறையான ஆவணங்களற்ற இந்த புலம்பெயர்ந்தோரை வேலை பார்க்க அனுமதித்து தங்களுக்க உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

அரசு இந்த சட்ட விரோத புலம் பெயர்ந்தோருக்கு வேலை உரிமங்கள் வழங்குவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வேலையும் வழங்க தயாராக இருக்கிறோம் என்கிறார் ஹோட்டல் யூனியன்களின் தலைவரான Didier Chenet.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்