பிரான்ஸில் பாலியல் வழக்கில் கைதான பேராசிரியர்: பாஸ்போர்ட்டை முடக்கிய நீதிமன்றம்

Report Print Kabilan in பிரான்ஸ்
140Shares
140Shares
ibctamil.com

பிரான்ஸில் நாட்டில் பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சுவிஸ் பேராசிரியர் மீதான விசாரணையில், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதுடன், பார்வைக் கோளாறுக்காக சிகிச்சை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் தாரிக் ரமதான் மீது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டு சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் ரமதான் மீது வழக்கு தொடுத்த பெண்களில் ஒருவரான ஹெண்டா அயரி, நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அப்போது அவர் கூறுகையில், தான் பாரிஸில் உள்ள Crowne Plaza ஓட்டலில், கடந்த 2012ஆம் ஆண்டு மே 26ஆம் திகதி ரமதானால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால், பொலிசாரின் விசாரணையில் அன்றைய திகதியில் வடக்கு பிரான்ஸில் உள்ள Rouen-யில், அயரி தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அயரி தனக்கு குறித்த திகதி ஞாபகம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டார்.

அதன் பின்னர், ரமதானின் வழக்கறிஞர்கள் இதனைச் சுட்டிக்காட்டி, ரமதானை விடுதலை செய்யக்கோரி வாதாடினர்.

எனினும், பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த மற்றொரு பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடு எதுவும் இல்லை. மேலும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண்ணோருவரும் ரமதானுக்கு எதிராக புகார் ஒன்றை தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக, ரமதானை விடுதலை செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், அவர் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், ஜாமீனுக்காக 3,00,000 யூரோக்கள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனால், ரமதான் தொடர்ந்து சிறையில் இருப்பதால், பார்வைக் கோளாறு காரணமாக அவர் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்