பிரான்சிலிருந்து தமிழகம் வந்த நபருக்கு நேர்ந்த கதி! உடலை எரித்து துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட கொடூரம்

Report Print Santhan in பிரான்ஸ்
577Shares
577Shares
ibctamil.com

தமிழகத்திற்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர்(68). தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டையை சேர்ந்தவர் திருமுருகன் (29).

பீட்டர் சுற்றுலாவிற்காக சென்னை வந்த போது, திருமுருகனின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த நட்பு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 3-ஆம் திகதி பீட்டர் பிரான்சிலிருந்து சுற்றுலாவுக்காக திருச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் திருமுருகனை தொடர்பு கொண்டு, உங்களது ஊரை சுற்றி பார்க்க வேண்டுமென என்று கூறியுள்ளார்.

இதையடுத்து திருச்சியில் இருந்து மன்னார்குடிக்கு ஒரு காரில் பீட்டரை திருமுருகன் அழைத்து சென்றார். பின்னர் இருவரும் மது அருந்தினர்.

அதன் பின் ஆவிக்கோட்டையில் உள்ள திருமுருகன் வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பீட்டரை திருமுருகன் கீழே தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பீட்டர் சற்று நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனால் பயந்துபோன திருமுருகன், தனது வீட்டிலேயே பீட்டரின் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தார். அதன் பின்னர் பீட்டரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி 3 மூட்டைகளாக கட்டி வாய்க்காலில் வீசியுள்ளார்.

இது குறித்து திருமுருகனை கைது செய்துள்ள பொலிசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்