பிரான்ஸின் தென்கிழக்கு பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிகளில் அடைமழை பொழியும் வாய்ப்புள்ளதால், அந்த பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் Bouches-du-Rhone, Drome, Var, Vaucluse ஆகிய நகரங்களில் அடைமழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் இந்த பகுதிகளில் கடுமையான புயல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதிகளுக்கு வரும் வியாழக்கிழமை வரை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மழைக் காரணமாக மின்சார தடை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்