அலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்! குவியும் பாராட்டுக்கள்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பிரான்சில் கடல் அலையில் சிக்கிய எஜமானின் பேத்தியை நாய் ஒன்று விரைந்து காப்பாற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் Gouville-sur-Mer பகுதியை சேர்ந்த ஒருவர் மத்தியாஸ் என்ற நாயினை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தந்து பேத்தியுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு கடலில் 6 முதல் 7 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே குளித்துக்கொண்டிருந்துள்ளார். நாயும் அவருடன் சேர்ந்து விளையாடியவாறு நின்று கொண்டிருந்துள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக பெரிய புயல் ஒன்று சிறுமியை மூழ்கடித்துவிட்டு செல்ல, உடனே ஆபத்தை உணர்ந்த அந்த நாய், சிறுமியின் ஆடையை வாயினால் கவ்வி மணல் பகுதிக்கு இழுத்து வந்து விடுகிறது.

கடந்த 3-ம் தேதியன்று எடுக்கப்பட்ட இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை பெற்ற இந்த வீடியோவில், பார்வையாளர்கள் பலரும் நாயின் செயலை பாராட்டி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்