பசியில் சாக்லேட் பன் வாங்கிய பிரான்ஸ் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் Tétéghem பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பசியில் சாக்லேட் பன் வாங்கி சாப்பிட முயற்சிக்கும்போது வாய்க்குள் சிக்கியது ஒரு பெரிய ஆணி.

சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு குடும்பமாக சென்றிருந்தபோது பசியில் சாக்லேட் பன் ஒன்றை வாங்கிய அந்தப் பெண் கிட்டத்தட்ட அந்த ஆணியை விழுங்கியிருக்க வேண்டும்.

நல்ல வேளையாக அவர் அதை வெளியில் எடுத்து விட்டார்.

2.5 சென்றீமீற்றர் நீளமுள்ள ஸ்க்ரூ ஆணி அது. அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணும் அவரது குடும்பத்தாரும் அந்த ஆணியை எடுத்துக் கொண்டு அந்த சாக்லேட் பன்னை வாங்கிய பேக்கரிக்கு சென்று காட்டி விளக்கம் கேட்டனர்.

அந்த பேக்கரி ஊழியரோ அது தங்கள் தவறு அல்ல என்றும் பெல்ஜியத்திலிருந்து அது வந்ததாகவும் தாங்கள் அதை வேக மட்டுமே வைத்ததாகவும் கூறி கைவிரித்துவிட்டார்.

இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தார் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதை தங்களுக்காக செய்யாமல் மற்றவர்களுக்கும் இதேபோன்ற பிரச்சினை ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவே நீதிமன்றம் செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்